தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தல்

ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 11:20 pm

ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர் சங்கத் தலைவர் செல்வராஜ், செயலர் ராஜாசிங் ஆகியோர் குமரி மாவட்ட ஆட்சியரிடம்  திங்கள்கிழமைஅளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நடத்தவேண்டும். மருத்துவ உதவி, புதிய மருத்துவ காப்பீட்டுத்  திட்டம், ஓய்வூதியர்களுக்கு வருகிற ஜூலை 1ஆம் தேதியில் இருந்து 2022 ஜூன் 30 ஆம் தேதி வரை 4 ஆண்டுகளுக்கு மருத்துவக் காப்பீடு ரூ. 5 லட்சமாகவும், கேன்சர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு ரூ. 7.5 லட்சமாகவும் உயர்த்தவேண்டும். மருத்துவச் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு முழுமையான செலவு தொகையை காப்பீட்டு நிறுவனம் மருத்துவமனைக்கு வழங்கவேண்டும். மருத்துவமனைகளில் பேக்கேஜ் முறை ஒழிக்கப்படவேண்டும். நோய்கள், மற்றும் மருத்துவமனைகளுக்கான பட்டியலுக்கு மட்டுமே காப்பீடு பொருந்தும் என்றில்லாமல், அனைத்து மருத்துவமனைகளிலும், எல்லா நோய்க்கும் சிகிச்சை பெற அனுமதிக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.