காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், அதன் நிறுவனர் தலைவர் வை. தினகரன் தலைமையில், கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடலுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், அவ்வமைப்பைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் ஜெய்சிங், அருளானந்தம், ஜனார்த்தனம், முகமது யாசின், மோகன்தாஸ், கண்ணன், முகமது ஜவாஹிர், மாவட்ட நிர்வாகிகள் சிகின் ராபிக், ராஜ்குமார், ஒன்றிய நிர்வாகிகள் நந்தகுமார், மணி, பாலமுருகன், ஐஸ்வர்யா, வெங்கடேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கன்னியாகுமரி போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

