நாகர்கோவில் இருளப்பபுரம் பசுபதீஸ்வரர் - பிரசன்னபார்வதி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா வெள்ளிக்கிழமை (ஏப். 20 ) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி, கோயிலில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை திருப்பள்ளி எழுச்சியும், 6 மணி முதல் 7.30 ம ணி வரை தேவார பஜனை நிகழ்ச்சியும், 9 மணிக்கு திருக்கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு இருளப்பபுரம் சிவசக்தி மகளிர் மன்றத்தாரின் 1,008 திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெறுகிறது. 2 ஆம் திருவிழா சனிக்கிழமை (ஏப். 21) காலை 7 மணிக்கு முருகப் பெருமானுக்கு சஷ்டி அபிஷேகம், 8.30 மணிக்கு திருவாதிரை திருவிழா அருள்மிகு நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து வாகனத்தில் திருவீதி உலா வருதல் ஆகியவை நடைபெறுகின்றன.
ஏப். 24இல் காலை 9 மணிக்கு திருவெம்பாவை அபிஷேகமும், பிற்பகல் 3 மணிக்கு துர்கா பூஜையும், இரவு 7 மணிக்கு சிவதேவஸ்தான சிவசக்தி மகளிர் மன்ற மாநாடும் நடைபெறுகிறது.
ஏப். 25 ஆம் தேதி இரவு 7 மணிக்கு 63 ஆவது இந்து சமய மாநாடு நடைபெறுகிறது. ஏப். 26 ஆம் தேதி இரவு 7 மணிக்கு அருள்மிகு பிரசன்ன பார்வதி சமேத பசுபதீஸ்வரருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை சிவதேவஸ்தான நிர்வாகக்குழுத் தலைவர் வழக்குரைஞர் டி. உதயகுமார், துணைத் தலைவர்கள் கிருஷ்ணபெருமாள், பாலகிருஷ்ணன், பரசுராம் செயலாளர் ராஜகுமார் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









