நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மாநில கோகோ போட்டி: வாறுதட்டு பள்ளி மாணவியர் தேர்வு

மாநில அளவிலான கோகோ விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வாறுதட்டு உயர்நிலைப் பள்ளி மாணவியர் இருவர் தேர்வாகியுள்ளனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:00 am IST

மாநில அளவிலான கோகோ விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வாறுதட்டு உயர்நிலைப் பள்ளி மாணவியர் இருவர் தேர்வாகியுள்ளனர்.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட அளவிலான கோகோ விளையாட்டுப் போட்டியில் களியக்காவிளை அருகேயுள்ள வாறுதட்டு மார் மத்தேயு காவு காட் நினைவு உயர்நிலைப் பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவியர் வி. அஸ்வினி, பி. ஜெரி கென்சா ஆகியோர் பங்கேற்று, மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகினர். வெற்றிபெற்ற மாணவியரை, தக்கலை மறைமாவட்ட அனைத்துப் பள்ளிகளின் தாளாளர் ஜோன்சிலால், பள்ளி  நிர்வாகி ஜோஸ் ஒற்றலாங்கல், பள்ளித் தலைமையாசிரியர் சத்தியதாஸ், உடற்கல்வி ஆசிரியர் என்.எம். பிரேம்ராஜ், பெற்றோர் -ஆசிரியர் கழகத் தலைவர் விஜயகுமார், கிராம கல்விக் குழு உறுப்பினர் சிவகுமார் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.