ஆரல்வாய்மொழியில் மணல் கடத்தியதாக டெம்போ லாரியை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் காவல் உதவி ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது, விருதுநகரில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற ஒரு டிம்போ லாரியை போலீஸார் சோதனை செய்தனர். அதில், இருந்த சாக்கு மூட்டைகளில் மணல் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, மணலுடன் லாரியைப் பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், லாரி ஓட்டுநர் தெற்கு சூரங்குடியைச் சேர்ந்த வேலப்பன் மகன் விஜய் என்ற விஜயராமன்( 22) , லாரி உரிமையாளர் ராஜாராம் (37) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






