நாகர்கோவில் அருகே குளத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் சாவு
நாகர்கோவிலில் நண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்ற பிளஸ்- 1 மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.


நாகர்கோவிலில் நண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்ற பிளஸ்- 1 மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நாகர்கோவில் மேலராமன்புதூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கலைச்செல்வன். இவரது மனைவி சித்ரா. நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.
இத்தம்பதியின் மகன் அலெக்ஸ் (17) பிளஸ் 1 படித்து வந்தார். கோடை விடுமுறை என்பதால், அவர் நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து, தம்மத்துக்கோணம் பகுதியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார். குளத்தில் குளித்தபோது, ஆழமான பகுதிக்குச் சென்ற அலெக்ஸ் நீரில் மூழ்கினாராம்.
தகவலறிந்து வந்த நாகர்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சடலத்தை மீட்டனர். ராஜாக்கமங்கலம் போலீஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...