மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் மகளிர் கூடைப்பந்து போட்டி

நாகர்கோவில் பொன் ஜெஸ்லி  பொறியியல் கல்லூரியில்,  மாவட்ட கூடைப்பந்து  கழகம்,  தமிழ்நாடு கூடைப் பந்தாட்டக் கழகத்துடன் இணைந்து நடத்தும் மாநில

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:46 am

DIN

நாகர்கோவில் பொன் ஜெஸ்லி  பொறியியல் கல்லூரியில்,  மாவட்ட கூடைப்பந்து  கழகம்,  தமிழ்நாடு கூடைப் பந்தாட்டக் கழகத்துடன் இணைந்து நடத்தும் மாநில அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி சனிக்கிழமை தொடங்கியது. 
18 வயதுக்குள்பட்டோருக்கான இப்போட்டி தொடக்க நிகழ்ச்சியில், என்.ஐ. பல்கலைக்கழக துணைவேந்தர் பெருமாள்சாமி குத்துவிளக்கேற்றினார். பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரித் தலைவர் பொன். ராபர்ட் சிங் தலைமை வகித்தார். மாநில கூடைப்பந்தாட்டக் கழகத் தலைவர் வி.வி.ஆர். ராஜ் சத்தியன் போட்டிகளைத் தொடங்கிவைத்தார். 
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் தியாகராஜன், வள்ளலார் பேரவைத் தலைவர் சுவாமி பத்மேந்திரா, மாவட்ட கூடைப் பந்தாட்டக் கழகத் தலைவர் சவரிமுத்து, செயலர் பிரேம், நிர்வாகிகள் நெல்லையப்பன், டென்னிசன்,  ஆஸ்டின், சாமுவேல்,  மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சாம்சன் தலைமையிலான உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டிகளை ஒருங்கிணைக்கின்றனர். போட்டிகள் தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.