8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல்-டீசல்: தொழிற்சங்க வேலைநிறுத்த விளக்கக் கூட்டம்

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில்  ஜனவரி மாதம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பான தெருமுனை விளக்கக் கூட்டம் நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேப்பமூடு பூங்கா அருகில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகி ஜான்பேபி தலைமை வகித்தார். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் கே.பி.பெருமாள் தொடக்க உரையாற்றினார்.
கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க பொதுச் செயலர் எஸ்.அந்தோணி, ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்டச் செயலர் பொன்.சோபனராஜ் ஆகியோர் உரையாற்றினர்.  சிஐடியூ மாவட்டச் செயலர் கே.தங்கமோகன் நிறைவுரையாற்றினார்.
இதில், ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகி மோகன், மோட்டார் தொழிலாளர் சங்க நிர்வாகி பிரேம் ஆனந்த், ஆசீர், ராஜன், கண்ணன், தாமோதரன், பிலிப், மார்க்சிஸ்ட் வட்டாரச் செயலர் மோகன்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.