குமரியில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: சீமான்
குமரி மாவட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சரக்குப் பெட்டக முனையத்துக்கு எதிராக போராட்டத்தில்


குமரி மாவட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சரக்குப் பெட்டக முனையத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.கன்னியாகுமரியை அடுத்த சமாதானபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நாம்தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த சீமான், முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியது: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற தீ விபத்துக்கு அரசே காரணம். அரசின் வருமானத்துக்காக கோயில் வளாகத்தில் ஏராளமான கடைகளை கட்டியுள்ளனர். கோயில் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகே கடைகள் அமைக்கப்பட்டதே தீ விபத்துக்கு காரணம். எனவே, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அப்பால் கடைகளை அமைப்பதே இதுபோன்ற தீ விபத்து சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உதவும். நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் சுங்கச்சாவடிகளை முழுவதுமாக அகற்ற நாம் தமிழர் தொடர்ந்து போராடி வருகிறது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியை அரசு ஏற்று நடத்தும் முடிவை கைவிட வேண்டும். அய்யாவழியைப் பின்பற்றும் மக்களின் உணர்வுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை அரசு எடுக்குமானால், அதற்கு எதிராக நான் நேரடியாக களத்தில் இறங்கி போராட்டம் நடத்துவேன். மேலும், கன்னியாகுமரி பகுதியில் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு உருவாக்க முனைந்திருக்கும் சரக்குப் பெட்டக முனையத்துக்கு எதிராகவும் போராட்டம் நடத்த உள்ளேன். தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள கன்னியாகுமரி பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...