காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நூதனப் போராட்டம்

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, நாகர்கோவிலில் நூதன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு,
Updated on
1 min read

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, நாகர்கோவிலில் நூதன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சி. வில்பிரட் தலைமை வகித்தார். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்டவற்றை முறையாக வழங்கவேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நீக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 8ஆவது ஊதிய மாற்ற அலுவல் குழுவில் மறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்கள் கண்களில் கருப்புத்துணி கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் பி. நிர்மலாபாய் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பி. பகவதியப்பபிள்ளை, மாவட்டச் செயலர் கிறிஸ்டோபர், மாவட்டப் பொருளாளர் பி. சுமதி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலர் எம். கோலப்பன், நாஞ்சில்நிதி, பி. நீலதங்கம், உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி. தங்கம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com