
அதிமுகவுடன் கூட்டணியா? பொன்.ராதாகிருஷ்ணன் பதில்
அதிமுகவுடன் கூட்டணி ஏற்படுமா? என்ற கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை பதிலளித்தார்.
அதிமுகவுடன் கூட்டணி ஏற்படுமா? என்ற கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை பதிலளித்தார்.
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா இம்மாதம் 22 ஆம் தேதி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் விழா நடைபெறும் கல்லூரியின் அருகில் நடைபெற்றுவரும் பார்வதிபுரம் மேம்பாலப் பணிகளை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை பார்வையிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பார்வதிபுரம் மேம்பாலப்பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒன்றரை மாதத்தில் பணிகள் அனைத்தும் நிறைவடையும்.
இந்நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா செப். 22இல் நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் அக்கட்சித் தொண்டர்கள் வரும் நிலை உள்ளது. எனவே, விழாவுக்கு வரும் வாகனங்களுக்கு தனிப்பாதை ஒதுக்கி, விழாவுக்கோ அல்லது மக்களுக்கோ போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாலப்பணிகள் நடைபெறும் என்றார் அவர்.
பின்னர் அவரிடம், பாஜக - அதிமுக கூட்டணி ஏற்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நேரிடையாக பதிலளிக்காத அவர், உங்களோடுதான் முதலில் கூட்டணி என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டுச் சென்றார்.
பாலப்பணி ஆய்வின்போது, குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஏ.அசோகன், அவைத் தலைவர் சேவியர் மனோகரன், நிர்வாகிகள் எஸ்.ஏ.விக்ரமன், ஜெயச்சந்திரன், பாஜக மாவட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன், துணைத்தலைவர் முத்துராமன், நகரத்தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





