கன்னியாகுமரியை அடுத்த கோட்டையடியில் பெண்களுக்கான கைத்தொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சி கழகம், கன்னியாகுமரி பூம்புகார் கைவினைப் பொருள்கள் விற்பனை நிலையத்தின் மூலம் கோட்டையடி அருமா கைத்தொழில் பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கு இலவச கைத்தொழில் பயிற்சி முகாம் 25 நாள்கள் நடைபெற்றது. இம்முகாமில் சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த 30 பெண்கள் பங்கேற்றனர். மாநில விருது பெற்ற கைத்தொழில் பயிற்சியாளர் அருள் ஹெப்ஸி பாய் பயிற்சியளித்தார். குறிப்பாக தென்னை நாரிலிருந்து அழகிய கலை பொருள்கள் செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது.
முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு பூம்புகார் விற்பனை நிலைய உதவி இயக்குநர் தருண் தலைமை வகித்து பேசியது: தமிழக அரசு பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்திருப்பதால் நார் பொருள்களுக்கு அதிக அளவில் தேவை ஏற்படுகிறது. எனவே, இதில் பயிற்சி பெற்ற பெண்கள் இந்தத் தொழிலை தொடர்ந்து செய்தால் நல்ல லாபம் பெற முடியும். இதற்காக வங்கியின் மூலம் கடன்வசதி பெறும் வசதி உள்ளது. இதை பயிற்சி பெற்ற பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
பூம்புகார் விற்பனை மேலாளர் லட்சுமணன், பயிற்சியாளர் வந்தனா ஆகியோர் உரையாற்றினார். தொடர்ந்து பயிற்சியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கதாநாயகனைப் போல நடிக்க முயன்றதால் தாக்கப்பட்ட அபிஷேக் பானர்ஜி: பாஜக

மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்!
டொனால்ட் டிரம்ப் உடல் எடையைக் குறைக்க மருத்துவ அறிவுரை!
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


