கடலோரப் பாதுகாப்பு குழுமம் சார்பில், கன்னியாகுமரி கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஸீ விஜில் ரோந்து பணி நடைபெற்றது.
மும்பையில் கடல்வழியாக ஊடுருவி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு கடல்வழிப் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதிநவீன படகுகள் மற்றும் பாதுகாப்புக் கருவிகளுடன் கடல்வழி ரோந்து பணியில் கடலோரப் பாதுகாப்புப் படை போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடற்கரைப் பகுதிகளில் நாடுதழுவிய ஸீ விஜில் ரோந்துப் பணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை இரவு வரை ரோந்து பணி நடைபெறும். கன்னியாகுமரி முதல் கூடங்குளம் வரையும், கன்னியாகுமரி முதல் குளச்சல் வரையிலும் இந்த ரோந்து பணி நடைபெறுகிறது.
கன்னியாகுமரி கடலோரக் காவல் குழும ஆய்வாளர் சைரஸ் தலைமையில், போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் வாகனச்சோதனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் கான்வாய் வருகைக்கு தனி வழி! போக்குவரத்துத்துறை ஏற்பாடு

எரிபொருள் நெருக்கடி: வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்த ஆளுநர் ஆர்லேகர்!

மீண்டும் சறுக்கியது சென்னை: மார்ஷ் அசத்தலில் வென்றது லக்னௌ

ஆப்பிரிக்காவில் ஐஎஸ்-ன் இரண்டாம் நிலை தளபதி கொலை: டிரம்ப்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
