கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே வேனும், பைக்கும் மோதிக்கொண்டதில் மாணவர்கள் உள்பட 3 பேர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
தக்கலை அருகே மூலச்சலைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி சரவணன் (19), பதினோறாம் வகுப்பு மாணவர் ஜோகில் (17), பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஷாஜி (18) ஆகியோர் செவ்வாய்க்கிழமை மாலை ஒரே பைக்கில் சென்றனர். அழகியமண்டபம் பிலாங்காலை என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த வேனும், பைக்கும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில், பைக்கில் சென்ற மூவரும் தூக்கிவீசப்பட்டதில் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
தக்கலை போலீஸார் அங்கு சென்று 3 பேரின் சடலங்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









