குமரி அறிவியல் பேரவை இளம் விஞ்ஞானி மாணவர்களின் அறிவியல் தமிழ் முழக்கம் நிகழ்ச்சி பைங்குளம் நூலகத்தில் நடைபெற்றது.
குமரி அறிவியல் பேரவையும், பைங்குளம் அரசு முழுநேர நூலகமும் இணைந்து நடத்திய இந் நிகழ்ச்சியில் இளம் விஞ்ஞானி மாணவர்கள் 54 தலைப்புகளில் பேசினர். நிகழ்ச்சிக்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் தமிழ்மாறன் தலைமை வகித்தார். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் அறிமுக உரையாற்றினார். வாசகர் வட்ட துணைத் தலைவர் மாதவன் தம்பி, வாசகர் வட்ட உறுப்பினர் பேராசிரியர் சஜிவ், நூலகர் துளசி ஆகியோர் பேசினர். குமரி முத்தமிழ் மன்றத் தலைவர் பா. லாசர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார்.
இதில் மார்த்தாண்டம் விபுரோ கல்வி நிறுவன நிர்வாக அலுவலர் ஜாண்சன், சமூக விஞ்ஞானி எட்வின்சாம், ஜாண் ரபிகுமார், சுனில்குமார், தீபா பெர்ஜின், சுஜின் ஹெர்பர்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இளம் விஞ்ஞானி மாணவி நித்திகா வாலன்டீனா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








