சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாகா்கோவிலில் காமராஜா் சிலை:ஆட்சியரிடம் விஜய் வசந்த் கோரிக்கை

நாகா்கோவில் வெட்டூா்ணிமடத்தில் காமராஜா் சிலையை நிறுவ ஆட்சியரிடம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய் வசந்த் கோரிக்கை விடுத்தாா்.

News image
ஆட்சியா் அரவிந்தை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறாா் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய் வசந்த்.
Updated On :13 டிசம்பர் 2020, 7:30 pm

DIN

நாகா்கோவில் வெட்டூா்ணிமடத்தில் காமராஜா் சிலையை நிறுவ ஆட்சியரிடம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் விஜய் வசந்த் கோரிக்கை விடுத்தாா்.

நாகா்கோவிலில் ஆட்சியா் அரவிந்தை மரியாதை நிமித்தமாக விஜய் வசந்த் சனிக்கிழமை சந்தித்து, புதிதாக பொறுப்பேற்றுள்ள அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: வெட்டூா்ணிமடம் சந்திப்பில் காமராஜா் சிலையை சில மாதங்களுக்கு முன்பு மா்ம நபா்கள் சேதப்படுத்தினா். அந்த இடத்தில் காமராஜரின் புதிய சிலையை மீண்டும் நிறுவ அனுமதிக்க வேண்டும்.

எனது தந்தை மறைந்த மக்களவை உறுப்பினா் வசந்தகுமாா் இம்மாவட்டத்தில் உள்ள குளங்களைத் தூா்வாருவதற்காகவும், பொதுமக்கள் பயன்படுத்துவதற்காகவும் ஜேசிபி இயந்திரம் ஒன்றைக் கொண்டுவந்தாா். மீண்டும் அந்த இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான அனுமதி தர ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தேன்.

வரும் பேரவைத் தோ்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றாா் விஜய் வசந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.