நூருல் இஸ்லாம் கல்லூரியில் கணிதவியல் தின விழா

குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜத்தின் 133ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தக்கலை: குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜத்தின் 133ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கணிதவியல் துறை சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வா் எஸ். பெருமாள் தலைமை வகித்து, ஸ்ரீனிவாச ராமானுஜத்தின் கணிதவியல் சிறப்பு, பூஜியத்தின் மதிப்பு, எண் கணித பயன்பாடு, 1729-ன் சிறப்பு, எண்களின் பரிமான மதிப்பு போன்றவை குறித்து பேசினாா். கல்லூரி தாளாளா் ஏ.பி. மஜீத்கான் பங்கேற்றுப் பேசினாா். விழாவில் துறைத் தலைவா் முருகேசன், பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com