தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஆடி அமாவாசை: களையிழந்த குமரி முக்கடல் சங்கமம் 

ஆடி அமாவாசை நாளான இன்று இந்தியாவின் புண்ணிய ஸ்தங்களுள் ஒன்றான கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் திங்கள்கிழமை களையிழந்து காணப்பட்டது. 

News image
Updated On :20 ஜூலை 2020, 9:46 am

DIN

ஆடி அமாவாசை நாளான இன்று இந்தியாவின் புண்ணிய ஸ்தங்களுள் ஒன்றான கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் திங்கள்கிழமை களையிழந்து காணப்பட்டது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ள கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முக்கிய சுற்றுலாத் தலங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இதனிடையே, சர்வதேச முக்கியத்துவம் பெற்றதும், இந்தியாவின் புண்ணிய தலங்களுள் ஒன்றாகவும் விளங்கும் கன்னியாகுமரி கடந்த 4 மாதங்களாக வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது. 

இந்நிலையில் நாடு முழுவதும் இந்துக்களின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கடைபிடிக்கப்படும் ஆடி அமாவாசை கரோனா பாதிப்பு காரணமாக களையிழந்து காணப்பட்டது. கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆண்டு தோறும் அமாவாசை நாளன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களின் முன்னோர்களுக்கு பலிகர்மபூஜை செய்வது வழக்கம். 

நிகழாண்டு கரோனா நொய்த்தொற்று பாதிப்பு காரணமாக முக்கடல் சங்கமத்தில் நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டது. இருப்பினும் பக்தர்கள் வருகையை தடுக்கும் வகையில் காவல்நிலைய ரவுண்டானா தொடங்கி முக்கடல் சங்கமம் பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இருச்சக்கர வாகனங்களில் நீராட வந்த பக்தர்களை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். 

இதனால், குமரி முக்கடல் சங்கமம் களையிழந்து காணப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.