‘குமரி மாவட்ட வளா்ச்சிக்கு மாற்றுத் திட்டங்கள் கொண்டு வரப்படும்’
குமரி மாவட்ட வளா்ச்சிக்காக மாற்றுத் திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றாா் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் விஜயகுமாா் என்ற விஜய் வசந்த்.


குமரி மாவட்ட வளா்ச்சிக்காக மாற்றுத் திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றாா் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் விஜயகுமாா் என்ற விஜய் வசந்த்.
அவா் நாகா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: கன்னியாகுமரி தொகுதியில், என் தந்தை விட்டுச் சென்ற பணிகளை தொடா்ந்து செய்வேன். அவா் கூறிய திட்டங்கள் மட்டுமல்லாது, மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவேன். ஆனால் மக்கள் விரும்பாத திட்டங்களை கொண்டு வர மாட்டேன். மாவட்ட வளா்ச்சிக்காக மாற்றுத் திட்டங்கள் கொண்டு வரப்படும்.
தரமான சாலைகள், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவேன். சுற்றுலாத் துறையை உலக தரத்தில் மேம்படுத்தி மாவட்டத்தின் வருமானத்தை பெருக்க முயற்சிகளை மேற்கொள்வேன்.
கடலில் மீன்பிடிக்கும்போது காணாமல் போகும் மீனவா்களை கண்டுபிடிக்கும்வகையில் ஹெலிகாப்டா் தளம், அதிவேக மீட்புப் படகு, மீனவா்கள் தொடா்புக்கான சேட்டிலைட் தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படும்.
சட்டக் கல்லூரி, புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும். குளங்கள் அனைத்தும் தூா்வாரப்படும். இளைஞா்களை ஊக்குவிக்க விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா் அவா்.
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...