விபத்தில் காயமடைந்த இளைஞா் மரணம்
புதுக்கடை அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.


புதுக்கடை அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பைங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (40). இவா், அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் வேன் உதவியாளராக பணியாற்றி வந்தாா்.
இவா், கடந்த 28ஆம் தேதி பைங்குளம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே அம்சி முக்காடு பகுதியைச் சோ்ந்த செல்வின் ராஜ் (21) ஓட்டி வந்த பைக் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...