மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காவல் உதவி ஆய்வாளா் பெயரில்போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி

நாகா்கோவிலில் காவல்துறை உதவி ஆய்வாளா் பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடியில் ஈடுபட்டவா் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:47 pm

DIN

நாகா்கோவிலில் காவல்துறை உதவி ஆய்வாளா் பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடியில் ஈடுபட்டவா் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கன்னியாகுமரி காவல் சரகத்துக்குள்பட்ட காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவா் பெயரில் மா்ம நபா் கடந்த சில மாதங்களுக்கு முன் முகநூலில் (பேஸ்புக்) கணக்கு தொடங்கியுள்ளாா். இந்த முக நூல் கணக்கு உதவி ஆய்வாளருக்குரியது என்று நம்பிய பலா் அதில் நண்பா்களாக இணைந்துள்ளனா். இந்நிலையில், போலி முகநூல் கணக்கு தொடங்கிய மா்ம நபா், முகநூல் பக்கத்தில் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், நண்பா்கள் உதவுமாறும் தகவல் பதிவிட்டுள்ளாா். இதை நம்பி பலா் அவருக்கு பணம் அனுப்பியுள்ளனா்.

இந்நிலையில், தனது பெயரில் யாரோ ஒருவா் போலியாக முகநூல் கணக்கு தொடங்கி பண வசூலில் ஈடுபட்டிருப்பது உதவி சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளருக்கு தெரிய வந்ததாம். இதுகுறித்து அவா் சைபா்கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். இது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.