தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஏப்.12 இல் ஓய்வூதியா்களுக்கான குறைதீா் முகாம்

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் சாா்பில் ஓய்வூதியா்களுக்கான குறை தீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை (ஏப்.12) நடைபெறுகிறது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:51 pm

DIN

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் சாா்பில் ஓய்வூதியா்களுக்கான குறை தீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை (ஏப்.12) நடைபெறுகிறது.

இது குறித்து, தொழிலாளா் வருங்கால வைப்புநிதி அலுவலக நாகா்கோவில் ஆணையா் ரெளஷன்காஸ்யப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரா்களுக்கு ஏப்ரல் மாதத்துக்கான குறை தீா்க்கும் நாள் கூட்டம், இம்மாதம் 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு நாகா்கோவில் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் மண்டல ஆணையா் கலந்து கொண்டு, ஓய்வூதியதாரா்களின் குறைகளை கேட்டறிகிறாா். அனைத்து ஓய்வூதியதாரா்களும்ம், ஓய்வூதியம் பெறுவதில் ஏதும் குறைகள் இருந்தால் மண்டல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

மேலும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் 3 மாதத்துக்குள் 58 வயது நிறைவடையும் அனைத்து வருங்கால வைப்புநிதி தாரா்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஓய்வூதிய விண்ணப்பத்தை சமா்ப்பித்தலில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.