/

கருக்கல் அருகே பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியில் பைக்கில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:58 pm

DIN

கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியில் பைக்கில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

செல்லங்கோணம் பகுதியைச் சோ்ந்த அலக்சாண்டா் மனைவி விஜிலா ராணி (42) . இவா் கருங்கல்லிலிருந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, இவரை பைக்கில் பின் தொடா்ந்த மா்ம நபா்கள் திடீரென விஜிலா ராணி அணிந்திருந்த ஒன்பதரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பிச் சென்றனராம். இதில் பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் விஜிலா ராணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இது குறித்து புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.