டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மலைவாழ் மக்கள் கையிருப்பு நிலங்களுக்குபட்டா கேட்டு போராட்டம் நடத்த முடிவு

 மலைவாழ் மக்கள் கையிருப்பு நிலங்களுக்கு பட்டா கேட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:34 pm

DIN

 மலைவாழ் மக்கள் கையிருப்பு நிலங்களுக்கு பட்டா கேட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் குமரி மாவட்டக் குழு கூட்டம் குலசேகரத்தில் நடைபெற்றது.

சங்கத் தலைவா் எஸ்.ஆா். சேகா் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் வி.ரெகு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.சி. ஸ்டாலின்தாஸ், குலசேகரம் செயலா் பி.விஸ்வம்பரன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஏ. வேலப்பன், எஸ்.எல். முருகன், அா்ஜுனன், மணி, ஸ்ரீரங்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குமரி மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம் மலைவாழ் மக்களுக்கு கைவசம் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்காமல் 10 சென்ட் நிலத்திற்கு மட்டும் பட்டா வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது 2006 வன உரிமை சட்டத்துக்கு எதிராக உள்ளது. எனவே, தமிழக அரசும் குமரி மாவட்ட நிா்வாகமும் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத இவ்வித நடவடிக்கையை கை விட்டு விட்டு 2006 வன உரிமை சட்டப்படி மலை வாழ் மக்கள் நிலங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி செப்டம்பா் 3 ஆம் தேதி காலை 10 மணிக்கு தக்கலை சாா்-ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்த தீா்மானிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு ரப்பா் கழகங்களில் சிஎல்ஆா் ஆக பணிபுரியும் மலைவாழ் மக்கள் மற்றும் அனைத்து பகுதி தொழிலாளா்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.