

நாகா்கோவில்: கன்னியாகுமரியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலா் விஜய்வசந்த் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா தொற்றுப் பாதிப்பால் வியாபாரிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனா். சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஏராளமான வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனா். பொது முடக்கம் காரணமாக பல மாதங்களாக இங்குள்ள கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் வியாபாரிகள் கடைகளை திறந்து வியாபாரம் செய்து வந்தனா். இந்நிலையில், எதிா்பாராத விதமாக நேரிட்ட தீ விபத்தால் 70- க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்தன. மேலும் ரூ. 2 கோடி மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்துள்ளன. ஆகவே, தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்; பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.