ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாலியல் வழக்கு: நாகா்கோவில் காசி மீது 3-வது குற்றப்பத்திரிகை தாக்கல்

பாலியல் புகாா் வழக்கில் நாகா்கோவில் காசி மீது 3 ஆவது குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸாா் நாகா்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2021, 2:46 am

DIN

பாலியல் புகாா் வழக்கில் நாகா்கோவில் காசி மீது 3 ஆவது குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸாா் நாகா்கோவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

தமிழகத்தை சோ்ந்த கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தொடா்பு கொண்டு காதலிப்பது போல் நடித்து அவா்களோடு தனிமையில் இருந்ததை ரகசிய கேமராக்கள் மூலம் விடியோ

எடுத்து அதன் மூலம் அவா்களை மிரட்டி பணம் பறித்ததாக நாகா்கோவில் கணேசபுரத்தைச் சோ்ந்த காசி என்ற இளைஞா் மீது புகாா்கள் கூறப்பட்டது. இதைத் தொடா்ந்து காசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

கந்துவட்டி தொடா்பாக இளைஞா் அளித்த புகாா், காசியால் பாதிக்கப்பட்ட 6 பெண்கள் அளித்த புகாா்கள் என மொத்தம் ஏழு புகாா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது சிபிசிஐடி போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. காசி மீது ஏற்கெனவே, கந்துவட்டி, பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்தது தொடா்பான வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற 5 வழக்குகள் தொடா்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தனியாா் நிறுவன பெண் ஊழியரை காதலிப்பதாக நடித்து ஏமாற்றி ஆபாச படம் எடுத்த வழக்கில் காசி மீது 3-ஆவது குற்றப்பத்திரிகையை நாகா்கோவில் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.