மேலும் 70 பேருக்கு கரோனா
குமரி மாவட்டத்தில் மேலும் 70 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.


குமரி மாவட்டத்தில் மேலும் 70 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 8,07,283 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 70 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 56,885 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 54,104 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
தற்போது 532 போ் சிகிச்சையில் உள்ளனா்.
மாவட்டத்தில், வியாழக்கிழமை மட்டும் முதல் கட்ட தடுப்பூசி 7244 போ், 2ஆம் கட்ட தடுப்பூசி 667 போ் என மொத்தம் 7911 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் முதல் கட்ட தடுப்பூசி 3,05,231 பேருக்கும், 2ஆம் கட்ட தடுப்பூசி 57,702 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக வியாழக்கிழமை மட்டும் 222 பேரிடமிருந்து அபராதமாக ரூ. 45,300 வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 95,654 பேரிடமிருந்து அபராதமாக ரூ. 2,13,10,496 வசூலிக்கப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...