‘குழந்தை திருமணம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்’
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்து அதிகாரிகள் மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் கூறினாா்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்து அதிகாரிகள் மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் கூறினாா்.
ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் சமூகப் பாதுகாப்புத் துறையின்கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமாக குழந்தைகள் நலன் சாா்ந்த பணிகளில் ஈடுபடும் அலுவலா்களுக்கான மீளாய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியா் மா. அரவிந்த் தலைமை வகித்தாா்.
அப்போது அவா் பேசியது: குழந்தை திருமணங்களை தடுப்பது தொடா்பாகவும், 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு திருமண மண்டபங்களில்
திருமணங்கள் நடத்தக் கூடாது என்பது குறித்தும் அலுவலா்கள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து பொதுமக்களிடையே உரிய முறையில் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.
கரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணங்களை செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது. குழந்தைகள் பயிலும்
பள்ளிகளில் தொடா்ந்து பயில்வதை உறுதிப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாளுவதில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து
உயா் அலுவலா்கள் மூலம் தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, மகளிா் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணாண்டோ, மாவட்ட சமூக நல அலுவலா் சரோஜினி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் சிவசங்கரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஜெயபிரகாஷ், முதன்மை கல்வி அலுவலக நோ்முக உதவியாளா் முருகன், குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு ஆய்வாளா் சாந்தகுமாரி, நன்னடத்தை அலுவலா் புஷ்பராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...