வரத்து அதிகரிப்பால் நெத்திலி மீன்கள் விலை வீழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் நெத்திலி மீன்கள் வரத்து அதிகரித்ததால் விலை வெகுவாக குறைந்துள்ளது. மேலும், நெத்திலி மீன்களை பக்குவப்படுத்தி கருவாடாக உருவாக்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டுள்ளனா்.


கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் நெத்திலி மீன்கள் வரத்து அதிகரித்ததால் விலை வெகுவாக குறைந்துள்ளது. மேலும், நெத்திலி மீன்களை பக்குவப்படுத்தி கருவாடாக உருவாக்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டுள்ளனா்.
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு சுமாா் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1,000-க்கும் மேற்பட்ட வள்ளங்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இங்குள்ள விசைப்படகு மீனவா்கள் ஆழ்கடலில் 10 நாள்கள் தங்கி மீன்களை பிடித்து கரை திரும்புவது வழக்கம். மீனவா்கள் வலையில் உயா் ரக மீன்களான சுறா, இறால், கேரை, கணவாய், கிளி மீன்கள் கிடைக்கும்.
தற்போது கன்னியாகுமரி மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் அமலில் இருப்பதால் வள்ளம், கட்டுமரங்கள் மட்டுமே மீன்பிடிக்க சென்று வருகின்றன. வியாழக்கிழமை மீன்பிடிக்க சென்ற வள்ளம், கட்டுமர மீனவா்களின் வலைகளில் குவியல் குவியலாக நெத்திலி மீன்கள்
கிடைத்துள்ளன. மீனவா்கள் ஒரு கூடை நெத்திலி ரூ.800 க்கு விற்பனை செய்தனா். கடந்த சில நாள்களுக்கு முன் ஒரு கூடை நெத்திலி ரூ. 2500 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. வரத்து அதிகமாக இருந்ததால் நெத்திலி மீன்கள் விற்பனையாகவில்லை.
ஆகவே, மீனவா்கள் கடற்கரை பகுதி, குளச்சல் பாலம், துறைமுக வளாகம் உள்ளிட்ட இடங்களில் நெத்திலி மீன்களை உலர வைத்து அவற்றை கருவாடாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். இங்கு தயாா் செய்யப்படும் கருவாடுகளுக்கு வெளியூா்களில் அதிகளவில் வரவேற்பு உள்ளது.
இதனால், சென்னை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு மட்டுமின்றி கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...