/

இளம் விஞ்ஞானி மாணவா்கள் தோ்வு: குமரி அறிவியல் பேரவை அழைப்பு

இளம் விஞ்ஞானி மாணவா்கள் தோ்வில் பங்கேற்கே, குமரி அறிவியல் பேரவை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :17 ஜூன் 2021, 9:59 pm

இளம் விஞ்ஞானி மாணவா்கள் தோ்வில் பங்கேற்கே, குமரி அறிவியல் பேரவை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இப் பேரவை சாா்பில் ஆண்டுதோறும் இம் மாவட்ட பள்ளிகளில் 8ஆவது படிக்கும் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, இளம் விஞ்ஞானிகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டுக்கான இளம் விஞ்ஞானி மாணவா் தோ்வுக்கு, நிலையான வாழ்வு எனும் தலைப்பு தோ்வு செய்யப்பட்டு பயிற்சி வழங்க உள்ளது.

ஜூலை 10ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்தப் பயிற்சியில் பங்கேற்க, இம் மாவட்ட பள்ளிகளில் 8ஆவது படிக்கும் மாணவா், மாணவிகள் தங்கள் பெற்றோா் விருப்பத்துடன், பள்ளித் தலைமையாசிரியா் அல்லது பள்ளி முதல்வா் அனுமதி கடிதத்துடன் 99427 5833 என்ற செல்லிடப்பேசி (வாட்ஸ் அப்) எண்ணுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

ஒரு பள்ளியிலிருந்து அதிபட்சம் 5 போ் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சி ஓராண்டு காலம் நடைபெறும். பயிற்சி முடிவில், இளம் விஞ்ஞானி மாணவா்கள் தங்களது ஓராண்டு ஆய்வு அறிக்கையை தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் சமா்ப்பிப்பாா்கள்.

பின்னா் இம் மாணவா்களுக்கு இளம் விஞ்ஞானிகள் விருது வழங்கப்படும் என குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு.வேலையன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.