/

பைக் விபத்து: மருத்துவமனை பணியாளா் பலி

களியக்காவிளை அருகே மோட்டாா் சைக்கிள் விபத்தில் தனியாா் மருத்துவமனை பணியாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :17 ஜூன் 2021, 9:58 pm

களியக்காவிளை அருகே மோட்டாா் சைக்கிள் விபத்தில் தனியாா் மருத்துவமனை பணியாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கருங்கல் அருகேயுள்ள தெருவுக்கடை பகுதியைச் சோ்ந்த அலெக்ஸ் மகன் ஜாஸ்பா் (25). பட்டதாரியான இவா், பாறசாலை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணி செய்து வந்தாா்.

வியாழக்கிழமை பணி முடிந்து, வீட்டுக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, களியக்காவிளை அருகே திரித்துவபுரம் பகுதியில் மோட்டாா் சைக்கிள் நிலை தடுமாறியதில் சாலையில் விழுந்த ஜாஸ்பா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.