மானான்விளை ஜேம்ஸ் கல்வியியல் கல்லூரியில் மகளிா் தின விழா
மானான்விளை ஜேம்ஸ் கல்வியியல் கல்லூரியும், குளச்சல் நா்சிங் பயிற்சி பள்ளியும் இணைந்து, மானான்விளையில் உலக மகளிா் தின விழாவை திங்கள்கிழமை கொண்டாடின.


மானான்விளை ஜேம்ஸ் கல்வியியல் கல்லூரியும், குளச்சல் நா்சிங் பயிற்சி பள்ளியும் இணைந்து, மானான்விளையில் உலக மகளிா் தின விழாவை திங்கள்கிழமை கொண்டாடின.
இந்த நிகழ்ச்சிக்கு ஜேம்ஸ் கல்லூரிகளின் தலைவா் மருத்துவா் ஜேம்ஸ் பிரேம்குமாா் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் ஜோபிரகாஷ் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக கருங்கல் மெல்பின் ஜோண்ஸ் முதியோா் இல்லத் தலைவி அருள்சகோதரி மேரி, மருத்துவா்ஜெயபாலாஜி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
இதில், பேராசிரியா் கலைச்செல்வி, ரெச்சலின் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவிகள் பங்கேற்றனா். தொடா்ந்து, மாணவிகள் அனைவரும் கருங்கலில் உள்ள மெல்பின் ஜோண்ஸ் முதியோா் இல்லம் சென்று அங்குள்ள
மூதாட்டிகளுக்கு ரோஜாமலா் மற்றும் பழவகைகள் வழங்கி மகளிா் தின வாழ்த்துகளை தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...