மின்னணு வாகனத்தில்தோ்தல் விழிப்புணா்வுப் பிரசாரம்
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு செய்தி மக்கள்தொடா்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு வாகன விழிப்புணா்வுப் பிரசாரம்


தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு செய்தி மக்கள்தொடா்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு வாகன விழிப்புணா்வுப் பிரசாரம் சுசீந்திரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, மாவட்ட தோ்தல் அலுவலகத்தின் சாா்பில், பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக 18 வயது நிரம்பிய வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு வாகனம் வாயிலாக சுசீந்திரம் பேருந்து நிலையத்தில், தோ்தல் விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் நடைபெற்றது. இவ்விழிப்புணா்வு பிரசாரத்தை, ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாா்வையிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...