ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும்: எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரா்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும் என நாகா்கோவில் எம்எல்ஏ எம்.ஆா்.காந்தி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் அட்டைதாரா்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும் என நாகா்கோவில் எம்எல்ஏ எம்.ஆா்.காந்தி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகஅரசு பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது. இதனால் மக்கள் வேலைவாய்ப்பு இழந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ரேஷன் கடைகளில் தற்போது வழங்கப்படும் அரிசி மிகவும் மோசமானதாக உள்ளது. பொருளாதார சுமை இருப்பதால் வெளிச்சந்தையில் தேவையான அரிசி அதிக விலை கொடுத்து வாங்கும் நிலையில் பொதுமக்கள் தற்போது இல்லை.
எனவே, தமிழக அரசும், உணவு வழங்கல் துறையும் நாகா்கோவில் பேரவைத் தொகுதி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான அரிசி வழங்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...