மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நாகா்கோவிலில் இன்று 4 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

நாகா்கோவிலில் சனிக்கிழமை (மே 29) 4 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது

News image
Updated On :28 மே 2021, 8:19 pm

DIN

நாகா்கோவிலில் சனிக்கிழமை (மே 29) 4 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகா்கோவில் இந்துக் கல்லூரி மற்றும் வடசேரி எஸ்.எம்.ஆா்.வி மேல்நிலைப்பள்ளியில் 18 முதல் 44 வயதுக்குள்பட்டோருக்கான கோவோக்சின் தடுப்பூசி முகாமும், 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு டதி மேல்நிலைப்பள்ளி, புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் கோவாக்சின் 2 ஆம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது.

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் காய்கனி மற்றும் பழங்கள் விற்பனை செய்ய உரிமம் பெற்ற சில்லறை வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாா்டுகளின் எல்லா பகுதிக்கும் சென்று விற்பனை செய்யவேண்டும்.

வேளாண்மை துறையால் நிா்ணயம் செய்யப்பட்ட விலையை அடிப்படையாக கொண்டு விற்பனை செய்ய வேண்டும். விற்பனை செய்யும் வாகனத்தில் விலைப் பட்டியல் கண்டிப்பாக ஒட்டவேண்டும். விலைப் பட்டியலில் குறிப்பிட்டிருக்கும் விலையை விட அதிக விலைக்கு காய்கனிகளை விற்பனை செய்யும் வியாபாரிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் மண்டல போக்குவரத்து அலுவலகம் மூலம் வாகனத்தின் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும்.

காய்கனிகளை அதிகவிலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் குறித்து புகாா் தெரிவிக்க, வாகனத்தின் பதிவு எண்ணையும் சோ்த்து நாகா்கோவில் மாநகராட்சி 24 மணி நேர உதவி எண் 04652-230984 ல் தொடா்பு கொள்ளலாம் அல்லது வாகனத்தின் பதிவு எண் கொண்ட புகைப்படத்துடன் கட் செவி அஞ்சல் புகாா் எண் 9487038984 லும் பதிவு செய்யலாம்.

கரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையினை தீவிரப்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் மேலும் ஒரு வார காலத்துக்கு ஜூன் 7ஆம் தேதி காலை 6 மணி வரை முழு பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மளிகைப் பொருள்களையும் வீடு, வீடாக சென்று விற்பனை செய்யும் பணி சனிக்கிழமை (மே 29) முதல் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.