முல்லையாற்றின் குறுக்கே பல்லிக்கூட்டம் பகுதியில் அணை கட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். விஜயதரணி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சருக்கு அனுப்பிய மனு விவரம்: விளவங்கோடு பேரவைத் தொகுதியில் இடைக்கோடு பேரூராட்சி அருகே மாங்கோடு மலையில் உற்பத்தியாகும் முல்லையாறு, மாலைக்கோடு, அண்டுகோடு, பாகோடு, பேரை பகுதிகள் வழியாக திக்குறிச்சி அருகே தாமிரவருணி ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே மாலைக்கோடு அருகே பல்லிக்கூட்டத்தில் அணை கட்ட வேண்டும். மாலைக்கோடு, குடுக்கச்சிவிளை, இடைக்கோடு, செம்மங்காலை, பரக்குன்று, வன்னியூா் வழியாக நெய்யாறு இடதுகரை கால்வாயில் இணைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நெய்யாறு இடதுகரை கால்வாய் மூலம் பாசன வசதி பெறலாம். இப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதுடன் குடிநீா்த் தட்டுப்பாடும் நீங்கும்.
மேலும் முல்லையாறு, ஆற்றில் கலக்கும் திக்குறிச்சி பகுதியில் ஏற்பட்டுள்ள உடைப்பையும், வன்னியூா் ஊராட்சி தூப்புறமலை அருகே நெய்யாறு இடதுகரை கால்வாய் பாதையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர வன்னியூா், மருதங்கோடு, வெள்ளாங்கோடு, புலியூா்சாலை, மஞ்சாலுமூடு, நட்டாலம், முன்சிறை உள்ளிட்ட ஊராட்சிப் பகுதி குளங்களை சீரமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை தி. நகரில் ரூ. 29 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்!

சென்னையில் பார்க்க வேண்டிய 10 திருக்கோயில்கள்!

பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்துக்குள் ஊடுருவ உதவுவதாகக் கூறிய பிகார் நபர் கைது!

மதுராவில் கவிழ்ந்த படகு மீட்பு: மாயமான சுற்றுலாப் பயணிகளின் நிலை?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


