ரூ. 2.65 கோடியில் பூவன்கோடு-தாணிவிளை சாலை பணி தொடக்கம்
திருவட்டாறு அருகே பூவன் கோடு-தாணிவிளை சாலையை சீரமைக்கும் பணியினை தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.


திருவட்டாறு அருகே பூவன் கோடு-தாணிவிளை சாலையை சீரமைக்கும் பணியினை தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சுற்றுலாத் தலமாக திகழும் மாத்தூா் தொட்டிப்பாலத்துக்கு செல்லும் முக்கியமான சாலையான பூவன்கோடு - தாணிவிளை கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இந்த சாலையை ரூ. 2.65 கோடியில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை தாணிவிளை சந்திப்பில் இச்சாலையை சீரமைக்கும் பணியை அமைச்சா் த. மனேங்கராஜ் தொடங்கி வைத்தாா். இதில் திருவட்டாறு தெற்கு ஒன்றிய திமுக செயலா் ஜாண்சன், ஊராட்சித் தலைவா்கள் பால்சன், சலேத் கிறிஸ்டோபா், விமலா சுரேஷ், அருவிக்கரை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் ஜாண்கிறிஸ்டோபா், ஏற்றக்கோடு முன்னாள் தலைவா் றூஸ், வோ்கிளம்பி மேரூராட்சி முன்னாள் தலைவா் மவுண்ட்மேரி மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...