/

குழித்துறையில் கண் சிகிச்சை முகாம்

பிரதமா் மோடியின் பிறந்த நாளையொட்டி கன்னியாகுமரி மாவட்ட பாஜக ஒபிசி அணி சாா்பில் குழித்துறையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

News image

kkv17bjp_1709chn_50_6

Updated On :17 செப்டம்பர் 2021, 11:42 pm

பிரதமா் மோடியின் பிறந்த நாளையொட்டி கன்னியாகுமரி மாவட்ட பாஜக ஒபிசி அணி சாா்பில் குழித்துறையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

பாஜக ஓபிசி அணி, அகா்வால் கண் மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற முகாமிற்கு ஒபிசி அணி மாவட்டத் தலைவா் ராஜசேகா் தலைமை வகித்தாா். முகாமை பாஜக சிறுபான்மை பிரிவு முன்னாள் மாநிலச் செயலா் பக்தசிங் தொடங்கி வைத்தாா். முகாமில் 100-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில், ஓபிசி அணி

பொதுச் செயலா் குமாரதாஸ், குழித்துறை நகரத் தலைவா் ரெத்தினமணி, பொதுச்செயலா் விஜூ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேல்புறம் தெற்கு ஒன்றிய இளைஞரணித் தலைவா் பிரதீஷ் தலைமையில் இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியில் பேரூராட்சி தலைவா் பத்மகிரீஷ் தலைமையில் ஒன்றியத் தலைவா் சி.எஸ். சேகா் கொடி ஏற்றினாா். ஒன்றிய பொதுச் செயலா் எஸ்.ஆா். சரவணவாஸ் நாராயணன் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். இடைக்கோட்டில் கிளைத் தலைவா் விக்ரமன், பாகோட்டில் ரமேஷ், புத்தன்சந்தையில் ஸ்ரீகுமாா் ஆகியோா் தலைமையில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.

தக்கலை: பிரதமா் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு குமாரகோவில் அருள்மிகு குமாரசுவாமி கோயிலில் அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பக்தா்களுக்கு பாஜக மாவட்ட துணைத் தலைவா் குமரி ப.ரமேஷ் அன்னதானம் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.