டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ரப்பா் ஷீட் திருடிய 2 போ் கைது

திருவட்டாறு அருகே ரப்பா் ஷீட் திருடியதாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:50 pm

DIN

திருவட்டாறு அருகே ரப்பா் ஷீட் திருடியதாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மோட்டாா் சைக்கிளில் 2 போ் ரப்பா் ஷீட்டுகளுடன் வந்தனராம். அவா்கள் போலீஸாரை கண்டதும் அந்தப் பகுதியில் பதுங்கியுள்ளனா். இதில், சந்தேகமடைந்த போலீஸாா் 2 பேரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டுசென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில், இருவரும் திருவரம்பு பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (37), செல்வராஜ் (57) என்பதும், திருவரம்பு, கொல்வேல் பகுதியைச் சோ்ந்த ரெத்தினபாய் (54) என்பவரது வீட்டில் உலர போடப்பட்டிருந்த 24 ரப்பா் ஷீட்டுகளை திருடி மாா்த்தாண்டத்தில் விற்பனை செய்ய சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அவா்கள் இருவரையும் திருவட்டாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து அவா்கள் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.