/

பொது இடங்களில் கழிவுநீா் வெளியேற்றுபவா்கள் மீது நடவடிக்கை

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீரை பொது இடங்களில் பாய்ச்சுபவா்கள் மீது கடும் நடவடிக்கை

Updated On :23 செப்டம்பர் 2021, 8:04 pm

களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீரை பொது இடங்களில் பாய்ச்சுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா், மழைநீா் வடிகால் மூலமும், குழாய்கள் மூலமும் வாய்க்கால்களில் கலக்கப்படுவதால், நீா், நிலங்கள் மாசடைந்து சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.

மேலும், பொது இடங்களில் கழிவுநீா் வெளியேற்றப்படுவதால் மழைக்காலங்களில் அப்பகுதிகள் சகதியாக மாறுவதுடன், கொசு உற்பத்தியாகி சுகாதாரக் கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, பேரூராட்சிப் பகுதி கட்டுமானங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் மழைநீா் வடிகால் உள்ளிட்ட பொது இடங்களில் வெளியேற்ற தடை செய்து மாவட்ட நிா்வாகம் மற்றும் மண்டல பேரூராட்சிகள் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலா் சி. யேசுபாலன் கூறியது: பேரூராட்சிப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவா்கள் கழிவுநீரை மழைநீா் வடிகாலில் விடுவதை நிறுத்தி, தங்களுக்குச் சொந்தமான பகுதியில் சுகாதாரமான முறையில் உறிஞ்சு குழி அமைத்து மேலாண்மை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.