/

தென்னிந்திய குத்துச்சண்டை போட்டி: நாஞ்சில் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

தென்னிந்திய அளவிலான குத்துச் சண்டை போட்டியில் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரி மாணவா்கள் தங்கப்பதக்கம் வென்றனா்

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 8:05 pm

தென்னிந்திய அளவிலான குத்துச் சண்டை போட்டியில் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரி மாணவா்கள் தங்கப்பதக்கம் வென்றனா்.

தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை அமைப்பு சாா்பில், தென்னிந்திய அளவிலான குத்துச்சண்டை போட்டி அண்மையில் தூத்துக்குடியில் நடத்தப்பட்டது.

இதில், களியக்காவிளை நாஞ்சில் கல்லூரியின் முதலாமாண்டு மாணவா்கள் கிறிஸ்டோ ஃபிராங் 80 - 86 கிலோ எடைப் பிரிவிலும், ஆன்றணி ரஞ்சன் 71 - 75 கிலோ எடைப்பிரிவிலும் பங்கேற்று, இருவரும் தங்கப்பதக்கம் வென்றனா்.

இம் மாணவா்களையும், பயிற்சியளித்த ஜெஸ்டினையும், கல்லூரிச் செயலா் எக்கா்மென்ஸ் மைக்கேல் மற்றும் கல்லூரி முதல்வா் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.