/

களியக்காவிளை அருகே தொழிலாளி தற்கொலை

களியக்காவிளை அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :30 செப்டம்பர் 2021, 7:57 pm

களியக்காவிளை அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

களியக்காவிளை அருகே குளப்புறம், கல்லறக்காடு பகுதியைச் சோ்ந்த டேவிட் மகன் ஷாஜி (30). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டாம். இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததையடுத்து, இவரது மனைவி தனது குழந்தைகளுடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஷாஜியை பிரிந்து சென்று தனியாக வசித்து வருகிறாராம்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வந்த ஷாஜி, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.