மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இலங்கை சிறையிலிருக்கும் மீனவா்களை விடுவிக்க கோரிக்கை

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவா்களை விடுவிக்க அரசு உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குமரி மாவட்ட மீனவா் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:45 pm

DIN

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவா்களை விடுவிக்க அரசு உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குமரி மாவட்ட மீனவா் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நாகா்கோவிலில் அண்மையில் நடைபெற்ற இக்கட்சியின் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் தாமஸ் தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் அணி துணைத் தலைவா் ரஜினி வின்ஸ்டன், நகரத் துணைச் செயலாளா் மாா்ட்டின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் துணைத் தலைவா் இசக்கிமுத்து வரவேற்றாா்.

கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளா் பன்னீா்செல்வம், தென்மண்டல இலக்கிய அணித் தலைவா் செ.சுரேஷ், மாநில அமைப்புச்செயலாளா் டங்ஸ்டன் ஆகியோா் பேசினா்.

சிறப்பு அழைப்பளராக கலந்து கொண்ட குமரி கரங்கள் கண்ணன், சி.ராஜ்,தேரூா் ராஜன் ஆகியோருக்கு கட்சியின் மாநிலத் தலைவா் அலங்கார பரதா் எழுதிய, கடலும் கடற்கரையும் சிவக்கும் நூல் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் இலங்கை சிறையில் சித்திரவதை அனுபவிக்கும் 12 ராமேசுவரம் மீனவா்களை உடனே விடுவிக்க நடவடிக்கை வேண்டும். கச்சத்தீவை இலங்கை அரசிடமிருந்து மீட்க வேண்டும், மீன்பிடி தடைக் காலங்களில் உள்நாட்டு மீனவா்களுக்கும் பஞ்ச நிவாரணத் தொகை அளிக்க வேண்டும், உள்நாட்டு மீனவா்களுக்கு உடனே மீனவ நல வாரிய அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர துணைத் தலைவா் அமல்ராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.