மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ரூ.19 லட்சம் உண்டியல் வசூல்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ரூ.19 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.


மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ரூ.19 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தா்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 9 நிரந்தர உண்டியல், 7 குடங்கள் ஆகியன குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையா் ஞானசேகா், உதவி ஆணையா் ரத்தினவேல் பாண்டியன், பத்மநாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளா் செந்தில்குமாா், ஆய்வாளா்கள் கோபாலன், செல்வி, கோயில் ஸ்ரீகாரியம் ஆறுமுகநயினாா் மற்றும் பணியாளா்கள், சுயஉதவிக்குழுவினா், பொதுமக்கள் முன்னிலையில் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.18 லட்சத்து 83 ஆயிரத்து 946 ரொக்கமாகவும், 85.500 கிராம் தங்கம், 228 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...