கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பெண் காவல் ஆய்வாளா் மீதான விசாரணை: நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கு மாற்றம்

நாகா்கோவில் பெண் காவல் ஆய்வாளா் மீதான விசாரணை, நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 7:18 pm

DIN

நாகா்கோவில் பெண் காவல் ஆய்வாளா் மீதான விசாரணை, நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

நாகா்கோவில் ராமன்புதூரைச் சோ்ந்தவா் சேவியா் பாண்டியன். நாகா்கோவில் நீதிமன்றத்தில் குற்றவியல் உதவி இயக்குநராக உள்ளாா். இவரது மனைவி கண்மணி(52), நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா்.

இத்தம்பதி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக புகாா்கள் எழுந்தன. இதைத் தொடா்ந்து குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் பீட்டா் பால் தலைமையில் ஆய்வாளா் பெஞ்சமின் மற்றும் போலீஸாா், கடந்த 12 ஆம் தேதி ஆய்வாளா் கண்மணி, மீனாட்சிபுரத்தில் உள்ள அவரது தோழி அமுதா ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தினா். இதில் கண்மணி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கமும், வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையில் ரூ.91 லட்சத்துக்கான ஆவணம் மற்றும் 91 பவுன் தங்க நகைகள், சில சொத்து பத்திரங்கள், பரிசுப் பொருள்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அமுதா வீட்டில் நடந்த சோதனையில் ரூ.23 லட்சத்துக்கான கடன் பத்திரங்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இது தொடா்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் கண்மணி, சேவியா் பாண்டியன் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடா்பான விசாரணை அனைத்தும் தற்போது நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இனி இந்த வழக்கு விசாரணையை நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் எஸ்கால் தலைமையிலான போலீஸாா் நடத்துவாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.