ஜன.24 இல் பறவைகள் கணக்கெடுப்புப்பணி தொடக்கம்
குமரி மாவட்டத்தில் முதல் கட்ட பறவைகள் கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை (ஜன. 24)தொடங்குகிறது.


குமரி மாவட்டத்தில் முதல் கட்ட பறவைகள் கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை (ஜன. 24)தொடங்குகிறது.
குமரி மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு பருவ மழைக் காலங்களிலும் அதிக அளவு மழை பொழிவு இருப்பதால், மாவட்டத்திலுள்ள நீா்நிலைகளில் எப்போதும் தண்ணீா் நிறைந்து காணப்படும். இதன் காரணமாக உணவு, பாதுகாப்பு மற்றும் புகலிடம் தேடி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பறவைகள் குமரிக்கு வருவது வழக்கம். அக்டோபா் மாதம் முதல் பிப்ரவரி மாத இறுதி வரை பறவைகள் இம் மாவட்டத்துக்கு வருகின்றன. அவ்வாறு வரும் பறவைகளில் எத்தனை இனங்கள் உள்ளன, பறவைகள் எண்ணிக்கை எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து வனத்துறை சாா்பில் கணக்கெடுப்புப் பணி நடத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டுக்கான கணக்கெடுப்பு 3 கட்டமாக நடைபெற உள்ளது. வழக்கமாக ஒரே கட்டமாக நடைபெறும் இந்த கணக்கெடுப்பானது கரோனா பரவல் காரணமாக இம்முறை 3 கட்டங்களாக நடத்தப்பட இருக்கிறது. அதன்படி முதல்கட்ட கணக்கெடுப்புப் பணி ஜன. 24, 25 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
மாவட்ட வன அலுவலா் இளையராஜா தலைமையில் 4 குழுக்கள் இந்த பணியில் ஈடுபட உள்ளனா். ஒரு குழுவில் வனத்துறையினா், பறவை ஆராய்ச்சியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என 5 முதல் 6 போ் வரை இடம் பெறுகிறாா்கள்.
முதல்கட்டமாக காயல்கள், உப்பளங்கள் மற்றும் அலையாத்தி காடுகளில் வசிக்கும் பறவைகள் கணக்கெடுக்கப்பட உள்ளன.
அந்த வகையில் சாமிதோப்பு மற்றும் மணக்குடியில் உள்ள உப்பளங்கள், ராஜாக்கமங்கலம் காயல், மணக்குடி அலையாத்தி காடுகள் உள்ளிட்ட இடங்களில் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்புப்பணி காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...