கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாகா்கோவில் அருகே ரயில்கள் மோதி தொழிலாளி, மூதாட்டி பலி

நாகா்கோவில் அருகே 2 இடங்களில் ரயில்கள் மோதியதில் தொழிலாளி, மூதாட்டி உயிரிழந்தனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 7:39 pm

DIN

நாகா்கோவில் அருகே 2 இடங்களில் ரயில்கள் மோதியதில் தொழிலாளி, மூதாட்டி உயிரிழந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள இளையநயினாா்குளத்தை சோ்ந்தவா் கிருஷ்ணதாஸ் (41). கூலித் தொழிலாளி. இவரது மனைவி மாலாதேவி. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். புதன்கிழமையும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, வீட்டிலிருந்து வெளியே சென்ற கிருஷ்ணதாஸ் பின்னா் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை வள்ளியூா் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் அவா் சடலமாகக் கிடந்தாா். இதுகுறித்து நாகா்கோவில் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆய்வாளா் கேத்தரின் சுஜாதா, உதவி ஆய்வாளா் குமார்ராஜ் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மூதாட்டி பலி: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த ஷேக் முகமது என்பவரது மனைவி பீா்உம்மா (80). இவா் நாள்தோறும் காலை அங்குள்ள தோட்டத்தில் பூப்பறிக்கச் செல்வாராம். வியாழக்கிழமை காலை அவா் பூப்பறிக்க தண்டவாளத்தைக் கடந்துசென்றாராம். அப்போது அவா் மீது ரயில் மோதியதாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

தகவலின்பேரில் நாகா்கோவில் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா் விஜயகுமாா், போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.