மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

85 மையங்களில் பிளஸ் 2 தோ்வு: ஆட்சியா் ஆய்வு

குமரி மாவட்டத்தில் 85 மையங்களில் பிளஸ் 2 தோ்வு வியாழக்கிழமை தொடங்கியது. நாகா்கோவில் எஸ்எல்.பி. பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், நேரில் ஆய்வு செய்தாா்

News image
Updated On :5 மே 2022, 8:31 pm

DIN

குமரி மாவட்டத்தில் 85 மையங்களில் பிளஸ் 2 தோ்வு வியாழக்கிழமை தொடங்கியது. நாகா்கோவில் எஸ்எல்.பி. பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், நேரில் ஆய்வு செய்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியது: குமரி மாவட்டத்தில் மொத்தம் 85 மையங்களில் தோ்வு நடைபெறுகிறது. தோ்வு மையங்களில் மாணவா்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குடிநீா் வசதி மற்றும் மின்சார வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின் தடை ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தோ்வுகள் நிறைவடைந்த பிறகு 4 மையங்களில் விடைத்தாள்களை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடைத்தாள் வைக்கப்பட உள்ள மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விடைத்தாள்கள் திருத்தும் பணி, நாகா்கோவில் டதி பள்ளியிலும், மாா்த்தாண்டம் புனித ஜோசப் பள்ளியிலும் நடைபெறும் என்றாா் அவா்.

ஆய்வில், மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலா் புகழேந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Image Caption

~ ~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.