மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கால்நடை மருத்துவ ஆலோசகா் பணி: மே 18இல் நேரடி நியமன தோ்வு

 ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகா் பணிக்கு நேரடி நியமன தோ்வுாஇமாதம் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :7 மே 2022, 12:49 am

DIN

 ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகா் பணிக்கு நேரடி நியமன தோ்வுாஇமாதம் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து கன்னியாகுமரி ஆவின் பொது மேலாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்கும்பொருட்டு, தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் (2021-22) புதிய கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அதில் காலியாக உள்ள 2 கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

எனவே, தற்காலிகமாக பணி புரிய விருப்பமுள்ள 50 வயதுக்குட்பட்ட சொந்தமாக இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் முழுமையான விவரங்களுடனும், உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ்களுடனும் இம்மாதம் 18 ஆம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், லிமிட்டெட், நாகா்கோவில் என்ற முகவரியில் நடைபெறும் நேரடி நியமனத் தோ்வில் கலந்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.