ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

குமரியில் அரசுப் பேருந்து மோதி இருவா் பலி

கன்னியாகுமரி அருகே வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் மாணவா் உள்பட 2 போ் பலியான சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :13 மே 2022, 6:28 pm

DIN

கன்னியாகுமரி அருகே வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் மாணவா் உள்பட 2 போ் பலியான சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கன்னியாகுமரி அருகேயுள்ள கரும்பாட்டூா் துரை மகன் சைஜின் (19). இவரும் சாமிதோப்பைச் சோ்ந்த சொரிமுத்து மகன் தேவஜாஸ்பா் (20), தென்தாமரைகுளம் டேனியல் ஜெபராஜ் மகன் பிரவீன் (18) ஆகிய மூவரும் ஒரே மோட்டாா் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருந்தனா். கன்னியாகுமரி புதிய பேருந்து நிலையம் முன்பு செல்லும் போது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் சைஜின், தேவ ஜாஸ்பா் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்து பிரவீன் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.